வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2021
Written By
Last Updated : வியாழன், 29 ஏப்ரல் 2021 (12:10 IST)

வளர்த்த கிடாய் நெஞ்சில் முட்டியது போல … கேதார் ஜாதவ் ஆட்டத்தைப் பார்த்து மீம்ஸ் போடும் ரசிகர்கள்!

சென்னை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஜாதவ் கடைசி கட்டத்தில் இறங்கி 4 பந்துகளில் 12 ரன்கள் சேர்த்து கலக்கினார்.

சென்ற ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிகம் ட்ரோல் செய்யப்பட்ட வீரர் கேதார் ஜாதவ். ஏனென்றால் சி எஸ் கே அணி ஜெயிக்க வேண்டிய பல போட்டிகளை பந்துகளை வீணாக்கி தோல்வி அடைய வைத்தார். அதனால் இந்த ஆண்டு ஏலத்தில் கழட்டி விடப்பட்டார்.

இந்நிலையில் எந்த சென்னை அணியால் கழட்டி விடப்பட்டாரோ அதே அணிக்கு எதிராக விளையாடும் வாய்ப்பு அவருக்கு நேற்று கிடைத்தது. கடைசியாக இறங்கிய அவர் கடைசி ஓவரில் அடுத்தடுத்து ஒரு பவுண்டரி மற்றும் சிக்ஸ் அடித்து 4 பந்துகளில் 12 ரன்களை எடுத்தார். இதனால் அதிருபதியடைந்த சி எஸ் கே ரசிகர்கள் மீம்ஸ் போட்டு அவரை கேலி செய்து வருகின்றனர்.