ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 29 ஏப்ரல் 2021 (08:51 IST)

கொரோனா முன்கள தடுப்பு பணிகளுக்கு ஆள் சேர்ப்பு… இன்றும் நாளையும் நேர்காணல்!

தமிழகத்தில் கொரோனாவுக்கு எதிராக முன்கள பணியாளர்களாக பணியாற்ற மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கான ஆள்சேர்ப்பு பணிகள் நடைபெற உள்ளன.

கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பரவி வரும் நிலையில் அதற்கெதிராக பணி செய்ய முன்களப் பணியாளர்கள் அதிகமாக தேவைப்படுகின்றன. இந்நிலையில் இப்போது அதற்காக ஆள்சேர்க்க நேர்முகத்தேர்வுகள் நடக்க உள்ளன. இன்றும் நாளையும் நடக்க உள்ள நேர்முகத்தேர்வில்  ஒப்பந்த அடிப்படையில் 150 டாக்டர்கள், 150 நர்சுகள் நேரடியாக நியமனம் செய்யப்படுகிறார்கள்.இந்த நேர்காணல் சென்னை ரிப்பன் மாளிகையில் நடக்கிறது.

இதில் தேர்வாகும் மருத்துவர்களுக்கு மாத சம்பளம் 60,000 ரூபாயும், நர்சுகளுக்கு 15,000 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.