பெங்களூ அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி
ஐபிஎல் தொடர் போட்டிகளில் 16வது போட்டியாக இன்று மும்பை வான்கடே மைதானத்தில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் பெங்களூர் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்றைய போட்டியில் சற்றுமுன் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராத் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.
எனவே முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி,20 ஓவர்களில் 177 ரன்கள் எடுத்து பெங்களூர் அணிக்கு 178 ரன்கள் வெற்றி இலக்கான நிர்ணயித்தது. அணியின் படிகல் 52 பந்துகளுக்கு 100 ரன்கள் எடுத்தார்.
இன்றைய போட்டியில் பெங்களூர் அணி வென்றால் 8 புள்ளிகளுடன் சென்னையை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை பிடித்து விடும் என்பதால் நிதானமாக ஆடியது.
இதையடுத்து விளையாடிய பெங்களுர் அணி விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.