திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Updated : வியாழன், 22 ஏப்ரல் 2021 (23:04 IST)

திருக்குறள் சொல்லி இலவசமாக Ear Phone எடுத்துசென்ற மாணவ, மாணவிகள்

phone மற்றும் கொரோனாவினை தடுக்கும் மாஸ்க் இலவசம் தனியார் செல்போன் கடையில் குவிந்த மாணவ, மாணவிகள் ஒவ்வொருவரும் திருக்குறள் சொல்லி இலவசமாக Ear Phone எடுத்துசென்ற மாணவ, மாணவிகள் மற்றும் திருக்குறள் ஆர்வலர்கள்.
 
உலக பொதுமறையாம் திருக்குறள் தமிழக அளவில் தற்போது பள்ளி மாணவ, மாணவிகளிடையே மட்டுமில்லாமல், கல்லூரி மாணவ, மாணவிகளிடையேயும், பெருமளவில் திருக்குறள் கற்கும் ஆர்வம் அதிகரித்து வருகின்றன., காரணம், திருக்குறள் எந்த மதத்தினையும்  சார்ந்தது அல்ல, எந்த சமயத்தினையும் சார்ந்தது அல்ல, பொதுவானது, பொதுமக்களுக்கு பயனுள்ளதாகவும் அமைந்துள்ள இந்த திருக்குறள் தற்போது கரூரில் பெருமளவில் ஒப்பிக்கப்பட்டு வருகின்றது. காரணம், கடந்த சில வருடங்களுக்கு முன்னரே கருவூர் திருக்குறள் பேரவை சார்பில் குறள் சொன்னால் பரிசு, என்கின்ற விததில், கருவூர் திருக்குறள் பேரவையின் நிறுவனத்தலைவர் மேலை.பழநியப்பன், பள்ளி பயிலும் மாணவ, மாணவிகள் கரூர் திருக்குறள் பேரவை அலுவலகத்திற்கு வந்து குறள் சொன்னால் அவர்களுக்கு நூல்கள், பொன்னாடை அணிக்கப்பட்டு பாராட்டு, திருக்குறள் பொறித்த பேனாக்கள் ஆகியவற்றைகளை இலவசமாக மேலை.பழநியப்பன் கொடுத்து வந்தார். இந்நிலையில்.,  கரூரில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 10 திருக்குறள் சொன்னால் ½ லிட்டர் பெட்ரோல் இலவசம், 20 திருக்குறள் சொன்னால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம் என்கின்ற திட்டத்தினை, கரூர் வள்ளுவர் பெட்ரோல் பங்க் அறிவித்தது.  பின்னர் தற்போது, கரூர் செங்குந்த புரத்தில் ஸ்ரீயா மொபைல் என்கின்ற தனியார் மொபைல் கடையில், கரூர் மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மட்டுமில்லாமல் தமிழ் ஆர்வலர்கள் என்று ஏராளமானோர் திருக்குறள் 10 சொன்னால் ஒரு செல்போனிலிருந்து வரும் சவுண்ட் இசையை கேட்கும் Ear Phone இலவசம் என்றும், அதனுடன் கொரோனாவினை தடுக்கும் மாஸ்க்கும் இலவசம் என்றும் அறிவித்தது. இதனால், மாணவ, மாணவிகள், தமிழ் ஆர்வலர்கள் தினந்தோறும் சென்று 10 திருக்குறள் சொல்லி, அவர்களுக்கு இலவசமாக கொரோனாவினை தடுக்கும் மாஸ்க் மற்றும் இலவச Ear Phone ஐ இலவசமாக வாங்கி செல்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு கருவூர் திருக்குறள் பேரவை நிறுவனத்தலைவர் மேலை.பழநியப்பன் நடுவராக கலந்து கொண்டும், பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினர். ஸ்ரீயா மொபைல்ஸ் என்கின்ற தனியார் மொபைல் கடையின் நிறுவன பங்குதாரர்கள் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை சிறப்பாக செய்திருந்தனர்