1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
  4. You will not bear Jagathir- Kamalhasan warning

தாங்க மாட்டீர்கள் ஜகத்தீரே- கமல்ஹாசன் எச்சரிக்கை

Kamalhasan warning
இன்று உலகம் முழுவதும் பூமி நாள் அனுஷ்டிக்கப்படுகிறது. இதுகுறித்து உலகில் உள்ள பல்வேறு மீடியாக்களும், பிரபலங்களும், சமூக ஆர்வலர்களும் கருத்துகளும் தகவல்களும் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் ஒரு பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது:

'பூமியை மீட்போம்' என்கிற கோஷத்தோடு உலக பூமி நாள் அனுஷ்டிக்கப்படுகிறது. இயற்கையைச் சிதைத்தால் விளைவு என்னவாக இருக்கும் என்பதை இக்காலம் 'மாதிரி' காட்டிக்கொண்டிருக்கிறது. தாங்க மாட்டீர்கள் ஜகத்தீரே… இயற்கையைப் பேணி அதன் கொடையால் நாமும் வாழ்வோம்  எனப் பதிவிட்டுள்ளார்.

 

About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
தேங்காய் பாலை அருந்துவதால் ஏற்படும் பயன்கள்