Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இவ்ளோ நாள் எங்க இருந்தப்பா? கொல்கத்தாவைக் காப்பாற்றிய லூக்கு பெர்குசன்!

Updated: திங்கள், 19 அக்டோபர் 2020 (11:26 IST)
கொல்கத்தா அணி நேற்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வெற்றி கொள்ள மிக முக்கியமானக் காரணமாக இருந்தார் லூக்கி பெர்குசன்.

கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகளுக்கு இடையே நேற்று நடந்த போட்டியில் சூப்பர் ஓவரில் கொல்கத்தா அணி சிறப்பான வெற்றியைப்ப் பெற்றது. இந்த வெற்றிக்கு முழுக்க முழுக்க காரணமாக அமைந்தவர் வேகப்பந்து வீச்சாளரான நியுசிலாந்து நாட்டைச் சேர்ந்த பெர்குசன் ஆவார்.

குறைந்த டார்கெட் கொண்ட இந்த போட்டியில் அவர் நான்கு ஓவர்களை வீசி வெறும் 15 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். அதுமட்டுமில்லாமல் சூப்பர் ஓவரில் 2 விக்கெட்களைக் கைப்பற்றி எதிரணியை 3 ரன்கள் மட்டுமே அடிக்கவிட்டார். இதன் மூலம் கொல்கத்தா அணி எளிதாக சூப்பர் ஓவரில் வெற்றியைப் பெற்றது. இதன் மூலம் கொல்கத்தா அணி புள்ளிப்பட்டியலில் நான்காம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. பெர்குசன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

எல்லாம் காட்டு

2027ஆம் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கும் தேதி.. ஐசிசி மாஸ்டர் பிளான்..

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்.. அடித்து விளையாடும் வங்கதேசம்.. விட்டா ஜெயிச்சிடும் போல...

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி.. ஆர்.அஸ்வின் கணித்த உத்தேச அணி வீரர்கள் பட்டியல்..

டிவி ரியாலிட்டி நிகழ்ச்சியில் ரோஹித் சர்மா.. இனி கிரிக்கெட் அவ்வளவு தானா?

ஐபிஎல் டெல்லி கேபிடல்ஸ் பிளேயர் கைது.. மருத்துவ மாணவிக்கு பாலியல் வன்கொடுமை?..

அடுத்த கட்டுரையில்
Show comments