164 ரன்கள் இலக்கு கொடுத்த கொல்கத்தா: ஐதராபாத்துக்கு கிடைக்குமா வெற்றி?

164 ரன்கள் இலக்கு கொடுத்த கொல்கத்தா:
siva| Last Updated: ஞாயிறு, 18 அக்டோபர் 2020 (17:27 IST)
164 ரன்கள் இலக்கு கொடுத்த கொல்கத்தா:
இன்று நடைபெற்று வரும் 35ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஹைதராபாத் முதலில் வென்று பீல்டிங் தேர்வு செய்ததை அடுத்து கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது. அந்த அணி ஐதராபாத் அனிக்கு ரன்கள் இலக்காக கொடுத்துள்ளது

இன்றைய போட்டியில் கொல்கத்தா அணியின் கில் 36 ரன்களும், திரிபாதி 23 ரன்களும் ரானா 29 ரன்களும் எடுத்தனர். கடைசி நேரத்தில் கேப்டன் மோர்கன் மற்றும் முன்னாள் கேப்டன் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடியதை அடுத்து கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 163 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மோர்கன் 4 ரன்களும் தினேஷ் கார்த்திக் 29 ரன்களும் எடுத்து உள்ளனர்
இதனை அடுத்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 164 என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் விளையாட உள்ளது. இன்றைய போட்டியில் வெல்லும் அணி பிளே ஆப் சுற்றுக்கு நுழைவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்ற காரணத்தினால் இரு அணிகளும் இந்த போட்டியை வெல்ல தீவிர முயற்சி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது

இன்றைய போட்டியில் ஐதராபாத் அணியின் நடராஜன் 2 விக்கெட்டுகளையும் விஜய் சங்கர், பசில் தம்பி மற்றும் ரஷித் கான் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :