புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2020
Written By Sinoj
Last Modified: சனி, 24 அக்டோபர் 2020 (19:57 IST)

ஐபிஎல்-2020; டெல்லியை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி !

அரபு அமீரகத்தில் இன்று முதலாவதாக டெல்லி கேப்பிட்டல்ஸுக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கும் போட்டி நடைபெற்றது. இதில் கொல்கத்தா அணி 59 ரன்கள் வித்தியாசத்தில்  டெல்லி அணியை வீழ்த்தியது.

ஐபில் -2020 இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்து டெல்லி அணிக்கு 195 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது

இன்றைய ஆட்டத்தில் கல்கத்தா வென்றால் 3வது இடத்திற்கும், டெல்லி வென்றால் முதலிடத்திற்கும் முன்னேறும் வாய்ப்பு உள்ளதால் எதிர்பார்ப்பு எழுந்தது.

இரண்டாவதாக பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது. எனவே கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி  59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.