செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 23 அக்டோபர் 2020 (21:42 IST)

ஐபிஎல் -2020; சென்னை அணி சொதப்பல் ஆட்டம்...115 ரன்கள் வெற்றி இலக்கு !

சென்னை அணி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இன்று மீண்டும் மோதவுள்ளதால் மேலும் பரபரப்பு கூடியுள்ளது.இன்று 7:30 மணிக்குத் தொடங்கவுள்ள போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று பந்துவீச்சுத்  தேர்வு செய்தது.

இந்நிலையில், இன்று இரவு 7:30மணிக்கு தோனி தலைமையிலான  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் பேட்டிங் தேர்வு செய்தது.

இதில் தொடக்கம் முதலே சிறப்பாக பேட்டிங் செய்யாத சென்னை அணி வீரர்கள் மளமளவென அவுட்டாகினர்.

பின்னர் சென்னை அணி 29 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்து, 115 ரன்களை மும்பை அணிக்கு இலக்கான நிர்ணயித்துள்ளது.

பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட சென்னை அணி சொற்ப ரன்களே எடுத்துள்ளதால் பீல்டிங் பவுலிங்கிலாவது அசத்துமா என்று பார்க்கலாம்.