Daily Horoscope
✕

இணை இயக்குநரை கல்யாணம் செய்து கொள்ளும் ‘ரங்கூன்’ இயக்குநர்

Written By CM
Updated: திங்கள், 14 மே 2018 (19:27 IST)
‘ரங்கூன்’ இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, தன்னுடன் பணியாற்றிய இணைஇயக்குநரையே கல்யாணம் செய்து கொள்ள இருக்கிறார்.
 
‘ரங்கூன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராஜ்குமார் பெரியசாமி.கெளதம் கார்த்திக் நடித்த இந்தப் படத்தில், இணை இயக்குநராகப் பணியாற்றியவர் ஜஸ்வினி. இவர் ஏற்கெனவே இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் அசோஸியேட்டாகப் பணியாற்றியவர். இருவருக்கும் வருகிற 25ஆம் தேதி சென்னையில் கல்யாணம் நடைபெற இருக்கிறது.
 
கடந்த 2009ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ‘உங்களில் யார்அடுத்த பிரபுதேவா?’. இந்த நிகழ்ச்சியின் இயக்குநரும் ராஜ்குமார் பெரியசாமி தான். இந்த நிகழ்ச்சிக்கு இண்டர்ன்ஷிப்புக்காக வந்திருக்கிறார் ஜஸ்வினி. எனவே, கடந்த 9 வருடங்களாகத் தொடர்ந்த நட்பு, தற்போது திருமணத்தில் முடிய இருக்கிறது.
 
ஜஸ்வினிக்கும் இயக்குநராக வேண்டும் என்பது ஆசையாம். ஒரே குடும்பத்தில் இரண்டு இயக்குநர்கள்… வாழ்த்துகள்!

எல்லாம் காட்டு

ஹாஸ்பிட்டல்.. ஆம்புலன்ஸ்.. அப்பாக்கு யாருமே பணம் வாங்கல!.. ஸ்ரீகாந்த் தேவா உருக்கம்...

எனக்கு அந்த நோய் இருக்கு!.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பார்வதி...

லெட்டர் போட்டேன்.. உங்களால படிக்க முடியல.. லவ் யூ மாமா!.. TTF வாசன் மனைவி ஃபீலிங்...

பாட பிடிக்காது.. ஃபீல்ட் அவுட் ஆனாலும் சினிமாவில் பாடுவேன்!.. அனிருத் பேட்டி வைரல்...

பாகிஸ்தான் வெப்தொடரை இந்தியாவில் தடை செய்ய கோரிக்கை.. நெட்பிளிக்ஸ் சம்மதிக்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments