திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 24 ஜனவரி 2018 (02:29 IST)

கல்யாணம் ஆகாத விரக்தியில் பாலத்தில் இருந்து கீழே விழுந்த சென்னை வாலிபர்

சென்னை திருவான்மியூரை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனக்கு திருமணம் செய்ய பெண் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் பாலத்தில் இருந்து கீழே விழுந்ததால் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

சென்னை திருவான்மியூரை சேர்ந்தவர்  வாலிபர் வசந்த். இவருக்கு 31 வயது ஆகியும் இன்னும் திருமணம் நடக்கவில்லை. யாரும் இவருக்கு பெண் தர மறுத்துவிட்டதாக தெரிகிறது

இந்த நிலையில் திருமணத்திற்கு பெண் கிடைக்காத விரக்தியில் ஆ.கே.நகர் – ராயப்பேட்டை சாலை சந்திப்பில் உள்ள பாலத்திலிருந்து திடீரென கீழே குதித்துள்ளார். அப்போது அந்த சாலையில் சென்றுகொண்டிருந்த கார் மீது அவர் விழுந்ததால் தலை, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை செய்து வருகிறார். இவரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இவர் மீது தற்கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.