Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அர்னால்டுக்கு இரண்டாவது முறை இதய ஆப்ரேஷன்! – இனி படங்களில் நடிப்பாரா?

Written By Prasanth Karthick
Updated: புதன், 28 அக்டோபர் 2020 (10:23 IST)
பிரபல ஹாலிவுட் ஹீரோ அர்னால்டுக்கு இரண்டாவது முறையாக இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

ஹாலிவுட்டின் பிரபல ஹீரோவான அர்னால்ட் டெர்மினேட்டர், ப்ரிடேட்டர், எக்ஸ்பெண்டபில்ஸ் உள்ளிட்ட பல ஆக்‌ஷன் படங்கள் மூலமாக உலகம் முழுவதும் புகழ் பெற்றவர்.

தற்போது தன்னுடைய 73 வயதிலும் படங்களில் நடித்து வரும் அர்னால்ட் கடந்த சில ஆண்டுகள் முன்னதாக இதயத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதற்கு பிறகு ஆக்‌ஷன் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட அவர், ஜனரஞ்சக படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இதயத்தில் உள்ள கோளாறை சரிசெய்ய அவருக்கு தற்போது மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது முறையாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளபோதும் தான் நலமாக இருப்பதாக அர்னால்ட் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இனி அவர் அதிகம் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ள நிலையில் இனி அவர் படங்களில் தொடர்ந்து நடிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

எல்லாம் காட்டு

படத்தோட கதை என்னன்னு கடைசி வரை கண்டுபிடிக்க முடியல! – டாக்ஸிக் படத்தை விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்

ரஜினி சார் வேறலெவல்!.. Gen Z வைப்.. சான்சே இல்ல!.. தர்மன் அனுபவம் பகிரும் அஸ்வத் மாரிமுத்து!...

தொடர்ந்து நிறைய படங்கள் ரிலீஸ்!.. விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு செம ட்ரீட்!..

சூப்பர் மேன் கதையில் நடிக்கும் விஷ்ணு விஷால்!.. பட்ஜெட் இவ்வளவு கோடியா!..

இந்த சம்பளத்துக்கு நடிக்க முடியாது!.. அஜித் படத்திலிருந்து மோகன்லால் விலகிய காரணம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments