ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 27 அக்டோபர் 2020 (19:20 IST)

50 பவுண்ட் வெயிட்.. முகத்தில் வழிந்த ரத்தத்தைச் சுவைத்த ராக்.. ஹாலிவுட் சூப்பர் ஸ்டாரின் வைரல் வீடியோ

உலகில் பிரசித்திப் பெற்ற  பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்று அமெரிக்காவில் புகழ்பெற்ற குத்துச்சண்டை விளையாட்டு.

இதில் தி ராக் என்று எல்லோராலும் செல்லமாக அழைக்கப்பட்டு உலகிற்கு அறியப்பட்டுள்ள மார்க்டுவைன், இன்றைய ஹாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார். வேறு எவரையும் விட தன் திறமையின் மூலம் முன்னணி நடிகராகி அதிகம் சம்பளம் பெற்று வருகிறார்.

இந்நிலையில் தனது உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்தி வரும் மார்க்டிவைன், நேற்று உடற்பயிற்சி செய்யும்போது 50 பவுட் எடையைத் தூக்கும்போது புருவத்திற்கு அருகில் அவருக்கு அடிப்பட்டு ரத்தம் வழிந்தது.

அப்போது வீடியோ எடுத்த அவர், இது சகஜம் என்று கூறி முகத்தில் வழிந்த ரத்தத்தைச் சுவைத்தார். அது சாஸ்போல சுவையாக உள்ளதாகக் கூறிய அவர் மீண்டும் உடற்பயிற்சிக்கு ஆயத்தமனார்.

அவர் இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை 17 மணிநேரத்தில் 2 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்கள் பாத்துள்ளனர்.