பிக்பாஸ் வீட்டில் சரியான சண்டை - பாலாவை ஆள் வச்சு அடிச்சுடுவாங்க போல!

Papiksha Joseph| Last Modified புதன், 28 அக்டோபர் 2020 (09:42 IST)

பிக்பாஸ் வீடு கடந்த இரண்டு நாட்களாக, சண்டை வாக்குவாதம் என்று நிகழ்ச்சி சூடு பிடித்து விறு விறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் நேற்று பாலா ஹவுஸ்மேட்ஸ்களிடம் "நான் கேப்டன் ஆனால் எல்லாரையும் அம்மி அரைக்க வைப்பேன்" என்று கூறிவிட்டார்.

ஏற்கனவே அர்ச்சனா - பாலாவுக்கு இடையில் பெரிய போர் போய்க்கொண்டிருக்கும் வேளையில் பாலாவை சமயம் பார்த்து தட்ட நினைத்த அர்ச்சனா இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு பாலாவை திட்டி பகைத்துக்கொள்கிறார். அதற்கு சப்போர்ட்டாக ரியோ , நிஷா , வேல்முருகன் என்ற அந்த மீடியா குரூப்பிஷன் நான்கு பேரும் ஒன்று சேர்ந்துக்கொண்டனர்.

இன்று வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவிலும் இதே சண்டை தொடர்கிறது. இதில் அர்ச்சனா ரொம்ப ஓவரா பண்றாங்க இதனால் அவரை வெறுப்பவர்கள் கூட்டம் அதிகமாகிறது. அர்ச்சனா வனிதாவை விட மோசமான பொம்பளையாக இருப்பாங்க போல என பலரும் விமர்சித்து வருகின்றனர். இப்போது வீட்டிற்குள் சக்தி மற்றும் காயத்ரியை திரும்ப பார்த்தது போல் உள்ளது. இந்த ரியோ மற்றும் அர்ச்சனாவின் நடவடிக்கைகள். ஆயிரம் தான் இருந்தாலும் அர்ச்சனா பண்ணது தப்பு.... கடைசியில பாலாவையே அழவச்சிட்டாங்களே.

பாலா கோவத்துல சொன்ன ஒரு சின்ன விஷயத்தை அர்ச்சனா பெருசா ஆக்குறாங்க. ஏன் நாமலாம் சொல்ல மாட்டோமா கோவத்துல அடிச்சுடுவேன் கொன்னுடுவேன்னு அது போல அவர் அம்மி அரைக்கவைக்குறேன்னு சொன்னாரு. இது என்னமோ தேச துரோகம் மாதிரி ஓவரா பண்ணுறாங்க ஜால்ராக்கள். பாலாவும் தன் மனதில் ஓவியான்னு நினைத்துக்கொண்டிருக்கிறார்.
தான் சொல்லுவது தான் சரி. நான் நேராக கதைப்பவன் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார். ஆனால், இவர் பாதி மீரா பாதி ஐஸ்வர்யா என்பது தான் உண்மை.


இதில் மேலும் படிக்கவும் :