செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 21 மார்ச் 2023 (23:00 IST)

அமாவாசை நாளில் பக்தர்கள் என்ன செய்யலாம்?

Amavasai
அமாவாசலை நாளில் பக்தர்கள் முன்னோர்களுக்கு விரதம் இருந்து அவர்களின் ஆசீர்வாதம் பெறலாம்.

அமாவாசை திதி மறைந்த முன்னோர்களுக்கு விரதம் இருந்து அவர்களை  வழிபட வேண்டும்.   இந்த நாளில் முன்னோர்களுக்கு பசி இருக்கும் நிலையில், அவர்களின் பசியைப் போக்க கருப்பு, எள் கலந்த நீரை தர்ப்பணம் செய்யும்போது, அவர்கள் தம் பசி நீக்கி நம்மை வாழ்த்துவர் என்று கூறப்படுகிறது.

இந்த அமாவாசை நாளில் முன்னோர்கள் நின்றுகொண்டிருப்பதாகவும், அவர்கள் தாகம் தீர்க்க அப்படி நிற்பதாகவும் கூறப்படும் நிலையில், இந்த நாளில்,விரதம் இருப்பவர்கள் வாசலில் கோலம் போடுதலோ, மாமிசம் சாப்பிடவோ, வெங்காயம், பூண்டு, ஆகியவற்றை செய்யக் கூடாது.

அதேபோல், நம் வாழ்க்கையில் செல்வம், ஆசீர்வாதம் கிடைக்க பித்ருக்களின் தேவையை நிவர்த்தி செய்யலாம். காலை 6:30 மணிக்கு தர்ப்பணம் கொடுக்க உகந்த  நேரமாகும்.

காலையில் கொடுக்க முடியவில்லை என்றால், சூரியன் மறைவுக்கும் தர்ப்பணம் கொடுக்கலாம். குறிப்பாக மதியத்தில் செய்யலாம் என்று கூறப்படுகிறது.