வியாழன், 9 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Updated : வியாழன், 6 அக்டோபர் 2022 (17:16 IST)

ஈசானிய மூலையில் செய்யக்கூடாத சில விஷயங்கள் என்ன தெரியுமா...?

Eesanyam corner
வாஸ்து சாஸ்திரத்தின்படி, நேர்மறை மற்றும் முற்போக்கான ஆற்றல்கள் உருவாகும் இடமே வடகிழக்கு திசையாகும். வடகிழக்கு திசை குபேரால் நிர்வகிக்கப்படுகிறது மற்றும் சிவபெருமான் வடகிழக்கில் வசிக்கிறார். இதனால், இது நல்ல ஆரோக்கியம், செல்வம் மற்றும் ஒட்டுமொத்த மிகுதியையும் மேம்படுத்தும் நல்ல ஆற்றல்களை ஈர்க்கிறது.


வீட்டில் எங்கும் வடகிழக்கு மூலையில் தடை இருக்கக்கூடாது. இருப்பினும், பல வடகிழக்கு மூலை வாஸ்து பரிகாரங்கள் உள்ளன, அவை குறைபாடுகளை நீக்குகின்றன.

முக்கியமான எட்டுத் திசைகளுக்கும் அதிபதியான தேவர்கள் அட்டதிக்குப் பாலர்கள் எனப்படுகின்றார்கள். வடக்குத் திசைக்குப் குபேரனும், கிழக்குத் திசைக்கு ஆதித்தனும், தெற்குத் திசைக்கு இயமனும், மேற்குத் திசைக்கு வருணனும் அதிபதிகளெனக் குறிப்பிடப்படுகிறார்கள்.

வடமேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு ஆகிய திசைகளுக்கு முறையே வாயு, ஈசன், அக்னி, பித்ரு ஆகியோர் அதிபதிகள். இந்து தத்துவங்களின்படி நிலம் உயிர்ப்புள்ள ஒன்றாகவே கருதப்படுகின்றது. ஒவ்வொரு கட்டிட மனையிலும் உள்ள இந்த உயிர்ப்புச் சக்தியையே வாஸ்து புருஷன் என வாஸ்து சாஸ்திரம் உருவகப்படுத்துகின்றது.

பஞ்சபூத ஆற்றல் கிடைக்க ஈசானிய மூலை காலியாக இருக்க வேண்டும். மாலையில் விளக்கேற்ற சுபிட்சமுண்டாகும். வீட்டின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் அதிக கதவுகள், ஜன்னல்கள் அமைய வேண்டும். வீட்டிற்கு ஜன்னல், கதவுகள் இரட்டைப்படையில் இருப்பதே நல்லது. வடகிழக்கில் குடிநீர் குழாய் இருத்தல் வேண்டும்.

ஈசானிய மூலையில் மண் அமைத்து அருகம்புல், துளசி வளர்ப்பது நல்லது. உயரமான துளசி மாடம் கட்டக்கூடாது. ஈசானிய மூலையில் மாடிப்படி கூடாது. ஈசானிய மூலையில் சமையல் அறை கூடாது. ஈசானிய மூலையில் குப்பை கூளங்களை குவித்தல் கூடாது.