திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Modified: புதன், 14 செப்டம்பர் 2022 (10:51 IST)

மஹாபரணி நட்சத்திர நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது நல்லதா...?

Maha Bharani
"மஹாபரணி" என்பது  மஹாளய பட்சத்தில் வரும் பரணி நட்சத்திர மாகும். பரணி நட்சத்திரம் என்பது யமதர்ம ராஜனின் நட்சத்திரம் ஆகும். இந்நாளில் இறந்த நம்  முன்னோர்கள் எல்லாம் அவரவர் கர்ம வினைக்கேற்ப யமதர்மனின் தீர்ப்புக்கு இணங்க சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் செல்வார்கள் என்பது நியதியாகும்.


யமதர்மனுக்கு  உகந்த மஹாபரணி நட்சத்திர நாளில் முன்னோர்களுக்கு சிராத்தம், திதிகள், தர்ப்பணம் செய்வது மற்றும் யம தீபம் ஏற்றுவ து போன்றைவைகளை செய்தால் யமதர்மன்  மனம் மகிழ்ந்து நரகத்திற்கு செல்லவேண்டிய நம் முன்னோர்களின் வேதனையை குறைத்து சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பார்கள் என ஐதீகம்.

தட்சிணாயன புண்ய காலத்தில் புண்ணியம் நிறைந்த புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய பட்சம் எனும் புண்ணியகாலம் கடந்த  21.09 2021 செவ்வாய் கிழமை  தொடங்கியது. இந்த பதினைந்து நாட்களும் மறைந்த முன்னோர் நம் வீடு தேடி வருவார்கள் என்பது நம்பிக்கை.

மஹாளயம் என்றால் கூட்டமாக வருதல். மறைந்த நம் முன்னோர் மொத்தமாக கூடும் நேரமே மஹாளய பட்சம். "பட்சம்' என்றால் 15 நாட்கள். மறைந்த முன்னோர் 15  நாட்கள் நம்மோடு தங்கும் காலமே மகாளய பட்சம்.

இது புரட்டாசி மாத பெளர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில்  துவங்கி, அமாவாசை வரை நீடிக்கும். புரட்டாசியில் வரும் அந்த அமாவா சையே மஹாளய அமாவாசை எனப்படும். தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட  உயர்ந்தது இது. மற்ற மாதங்களில் அமாவாசையன்று முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்வோம். அவர்கள் மறைந்த தமிழ் மாதத்தில் வரும் திதியில், சிராத்தம்  முதலியன செய்வோம். ஆனால், மஹாளய பட்ச காலத்தில் பிரதமை துவங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும்.