அமாவாசை தினத்தில் காகங்களுக்கு உணவளிப்பது ஏன் தெரியுமா...?
அமாவாசை நாளில் வீட்டின் பூஜையறையை சுத்தம் செய்து தீபமேற்ற வேண்டும். பின்பு உங்கள் வீட்டிலிருக்கும் மறைந்த முன்னோர்களின் படத்திற்கு பூக்கள் சமர்ப்பித்து, தூபங்கள் கொளுத்தி வணங்க வேண்டும்.
சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அமாவாசை திதி, தர்ப்பணம் போன்றவற்றை தர இயலாதவர்கள் அன்றைய தினம் உங்கள் வீட்டிலேயே முன்னோர்களை வழிபட்டு கருப்பு மற்றும் வெள்ளை எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு உணவாக வைப்பதால் முன்னோர்களுக்கு திதி அளித்த பலன் உண்டாகும்.
ஆவணி மாதம் சுப மற்றும் தெய்வீக காரியங்கள் செய்வதற்கான சிறப்பான மாதமாக இருக்கிறது. இந்த ஆவணி மாதத்தில் வருகிற அமாவாசை தினத்தில் மேற்கண்ட முறையில் தர்ப்பணம் மற்றும் சிராத்தம் தந்து முன்னோர்களை வழிபடுவதால் வீட்டில் தரித்திர நிலை நீங்கி சுபிட்சங்கள் பெருகும்.
இன்று முன்னோரை ஆராதித்து தர்ப்பணம் செய்யுங்கள். அவர்களின் படங்களுக்கு பூக்களால் அலங்கரித்து, தீபதூபம் காட்டுங்கள். இந்த அமாவாசை நாளில், காகத்திற்கு மறக்காமல் உணவிடுங்கள். மேலும், நான்கு நபர்களுக்காவது முன்னோரை நினைத்து உணவு வழங்குங்கள். இதனால் பித்ருக்கள் குளிர்ந்து போவார்கள். உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் ஆசீர்வதிப்பார்கள். பித்ருக்கள் சாபமெல்லாம் நீங்கும்.
ஆவணி மாதம் சுப மற்றும் தெய்வீக காரியங்கள் செய்வதற்கான சிறப்பான மாதமாக இருக்கிறது. இந்த ஆவணி மாத அமாவாசை தினமான இன்று மேற்கண்ட முறையில் தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் செய்து முன்னோர்களை வழிபடுவதன் மூலம் வீட்டில் தரித்திர நிலை நீங்கி சுபிட்சங்கள் பெருகும்.
தங்கள் வம்சத்தில் திருமணம் காலதாமதமாகும் நபர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். வீண் பண விரயங்கள் ஏற்படுவது நீங்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றி பெறும். காரிய தடைகள் நீங்கும்.