புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (18:42 IST)

முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மறைய இந்த டிப்ஸை பயன்படுத்தி பாருங்க !!

கசகசா ஒரு ஸ்பூன் எடுத்து தண்ணீருடன் கலந்து அரைத்து முகத்தில் பூசிக் கொண்டு அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான வெந்நீரில் கழுவி வந்தால் முகம் பளிச்சென்று இருக்கும்.


புதினா சாறு, எலுமிச்சைச்சாறு இரண்டையும் வெந்நீரில் கலந்து மூன்று நாட்களுக்கு ஒரு முறை முகத்தில் ஆவி பிடித்தால் அழுக்குகள் அகன்று சுத்தமாகவும் வசீகரமாகவும் இருக்கும்.

தேங்காய் எண்ணெய், தேங்காய்ப் பால் சம அளவு எடுத்து, இரண்டு ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் தூள் கலந்து காய்ச்சி வடிகட்டி தினந்தோறும் முகம், கை, கால்கள், உடம்பில் தடவி அரைமணி நேரம் கழித்து பாசிப்பயறு மாவினால் தேய்த்துக் குளித்தால் உடல் நல்ல நிறமாகி மின்னும்.

ஆரஞ்சு அல்லது எலுமிச்சம் பழத்தோலை வெயிலில் காயவைத்துப் பொடித்து அதனுடன் கடலை மாவு, பால், தண்ணீர் சேர்த்து முகத்தில் பூசி உலர்ந்தவுடன் கழுவிக் கொண்டால் முகத்திலுள்ள சுருக்கங்கள் நீங்கும்.

முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மறைய ஒரு ஸ்பூன் தயிருடன் தக்காளிப் பழத்தைச் சேர்த்துக் குழைத்து தடவிக் கொண்டு நன்குறியதும் கழுவிக் கொண்டால் போதும்.