1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (14:04 IST)

மூளையின் செயல்பாட்டுக்கு உதவும் கருப்பு கவுனி அரிசி !!

கருப்பு கவுனி அரிசியில் அதிக அளவு நார்ச்சத்து, ஊட்டச்சத்து மற்றும் இயற்கையாகவே ஆக்ஸிஜனேற்ற சக்தியையும் கொண்டிருக்கிறது.


உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகளை குறைப்பதால். இதயத்தின் ரத்த குழாய்களில் கொழுப்பு சேர்வதை தவிர்க்கிறது. இதனால் இதயம் பாதுகாக்கப்படுகிறது.

கவுனி அரிசியில் இருக்கும் ஆந்தோசைனின், நம்முடைய மன அழுத்தத்தை குறைத்து சிறந்த மூளை செயல்பாட்டுக்கும் உதவுகிறது.

கருப்புகவுனி அரிசி உடலின் ஆரோக்கியத்திற்கு ஏற்றது. கருப்பு கவுனி அரிசி சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு தான். கருப்பு கவுனி அரிசி ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவினை குறைக்க உதவும்.

ஆர்கானிக் கருப்பு கவுனியை காற்று போகாத வகையில் பாதுகாக்க லவங்கம், கிராம்பு அல்லது மிளகாய் வற்றல் போட்டு வைக்கலாம். இதனால் பூச்சிகள் மற்றும் புழுக்கள்  வராமல் தடுக்கலாம்.