1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (18:38 IST)

பாதங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க என்ன செய்யவேண்டும்...?

வெதுவெதுப்பான நீரில் கல் உப்பு போட்டு அதில் பாதங்களை அரை மணி நேரம் ஊற வைத்து , பின் ஸ்கர்ப் கொண்டு பாதங்களைத் தேய்க்க வேண்டும்.


பிறகு மென்மையான டவலால் கால்களைத் துடைக்கவும். இறுதியாக கால் பாதங்களில் தேங்காய் எண்ணெய்யை தடவ வேண்டும்.

பாதங்களுக்கு மசாஜ் செய்யும் போது உடலின் முக்கிய நரம்புகள் தூண்டப்படுகிறது. இதனால் மனதிற்கு ரிலாக்ஸ் கிடைக்கிறது. நம்முடைய பாதங்கள் ஆரோக்கியமாக இருந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

பாதத்துக்கு மசாஜ் செய்தல் மற்றும் மிதமான சுடுநீரில் பாதத்தைக் கழுவுதல் ஆகியவை பாதங்களில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். பாதத்தில் வெடிப்பு உள்ளவர்கள் வீட்டில் மருதாணி இலையை விழுது போல நன்கு அரைத்து வெடிப்பு உள்ள இடங்களில் வாரந்தோறும் தடவி வந்தால் வெடிப்பு நீங்கும்.

இரவு நேரத்தில் பாதங்களைக் கழுவி பராமரித்து வந்தால் இறந்த செல்கள் நீங்கும். இரத்த ஓட்டம் தூண்டப்படும். மூட்டு வலிகள், தசை வலிகள் குணமாகும். மூளையும் மனதும் அமைதி ஆவதால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.

ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை பழத் தோலால் பாதங்களை நன்றாகத் தேய்த்துக் கழுவ வேண்டும். இது கால் அழுக்குகளை நீக்கி, பாதக் கிருமிகளை ஒழிக்கும்.

தினமும் இரவில் படுக்கப்போவதற்கு முன்பு ஒரு பாத்திரத்தில் சூடு தாங்கும் அளவு வெந்நீர், உப்பு, எலுமிச்சைச்சாறு, ஷாம்பு போட்டு பாதங்களை 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஊற வைத்து பிறகு பிரஷினால் சுத்தம் செய்யவும்.