1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (16:19 IST)

முகப்பருக்களை முற்றிலும் நீக்க உதவும் இயற்கை மருத்துவ குறிப்புகள் !!

பருக்கள் மீது புதினா இலைகளை அரைத்து தடவலாம். அல்லது வேப்பிலை பொடியுடன் மஞ்சள் சந்தனம் கலந்து பருக்கள் மீது பூசி வரலாம்.


பப்பாளி விழுதுடன் அருகம்புல் சாறு, பன்னீர் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவலாம். இது சூரிய வெப்பத்தால் ஏற்பட்ட கருமை மற்றும் முகப்பருக்களை நீக்கும்.

வேப்பிலை பொடி, புதினா பொடி, துளசி பொடி மூன்றையும் தலா 10 கிராம் அளவு எடுத்து நீரில் குழைத்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதை தொடர்ந்து 5 நாட்கள் செய்து வந்தால் பருக்கள் படிப்படியாக மறையும். இந்த கலவையை கண்களுக்கு கீழ்புறம் தடவக்கூடாது.

கஸ்தூரி மஞ்சள், சந்தனம், சங்கு சம அளவு அரைத்து முகத்தில் பூசினால் முகப்பருக்கள் மறையும். சின்ன வெங்காயத்தை எடுத்து பாலில் வேக வைத்து மையாக அரைத்து பருக்கள் மீது தடவி வந்தால் பருக்கள் குறையும்.

அருகம்புல் பொடி, குப்பைமேனி இலை பொடி இரண்டையும் சம அளவு எடுத்து நீரில் குழைத்து இரவு தூங்கும்போது பருக்களின் மீது தடவி காலையில் முகத்தை கழுவ வேண்டும். இதனை ஒரு வாரம் தொடர்ந்து செய்தால் பருக்கள் முற்றிலும் நீங்கிவிடும்.

பருக்களின் மேல் துளசி சாறு பூசி வந்தால் பருக்கள் இல்லாமல் மறைந்து போகும். முட்டை கோஸ், தக்காளி, கேரட் இவற்றை பச்சையாக அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பருக்கள் போகும்.

வெள்ளரிக்காயை அரைத்து அதை முகத்தில் தடவுங்கள். இது எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு அதிகப்படியான எண்ணெய்யை நீக்கி முகப்பருக்களையும் முற்றிலும் நீக்கும்.