வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 29 மார்ச் 2019 (20:30 IST)

நான் இறந்ததாக வதந்தி பரப்புகிறார்கள் - பிரபல நடிகர் வேதனை

நடிகர் முத்துக்காளை தமிழ் சினிமாவில் முக்கியமான காமெடி நடிகராக உள்ளார். வடிவேலு மாமெடிகளில் அசத்தலான நடிப்புகளில் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர்.
தற்போது அவர் நடித்து வரும் வாங்க படம் பார்க்கலாம் என்ற  படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசினார்.
 
அப்போது அவர் கூறியதாவது ;
 
சமீபகாலமாக நான் இறந்துவிட்டதாக யூடியூப் சேனலில் நான் இறந்து 2 வாரம் ஆகிவிட்டதாக செய்திகள் வந்து கொண்டிடுக்கின்றன. நான் உயிருடன் தான் இருக்கிறேன்.
படப்பிடிப்புகளுக்கு செலவதை விட இதுபற்றி மற்றவர்களுக்கு விசாரிக்க வரும் தொலைபேசி அலைப்புகளுக்கு நான் உயிருடந்தான் இருக்கிறேன் என்று கூறுவதுதான் பெரிய வேலையாக இருக்கிறது.இவ்வாறு அவர் உருக்கமாக அவர் பேசினார்.