புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. தேர்தல் 2019 சிறப்பு நிகழ்வுகள்
Written By
Last Modified: வெள்ளி, 29 மார்ச் 2019 (17:13 IST)

விண்வெளியிலும் காவலாளியை நியமித்திருக்கிறோம் - மார்தட்டும் மோடி

வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு அனைத்துக்கட்சிகளும் பரப்பரப்புடன் தேர்தல் பிரசாரம் செய்துவருகின்றனர்.  தற்போது பிரதமராக உள்ள மோடி அடுத்தும் பாஜகவின் பிரதமராக வர வேண்டும் என்று அக்கட்சி தொண்டர்கள் கருதுகிறார்கள். கருத்துக்கணிப்புகளும் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்தன.
இந்நிலையில் ஒடிசாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மோடி பாஜக ஆட்சியில் விண்வெளியிலும்  காவலாளியை நியமித்துள்ளோம் என்று தெரிவித்தார்.
 
ஒடிசா மாநில சட்டசபைக்கு உட்பட  147 தொகுதிகள் மற்றும் மக்களவைத் தேர்தலுக்கான 21 பாராளுமன்றத் தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 11, 18, 23,29 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக நடைபெறவுள்ளது.
 
இந்நிலையில் ஒடிசாவில் பிரசாரம் மேற்கொண்ட மோடி கூறியதாவது :
 
ஒடிசா மாநிலத்திற்கு தேவையான வளர்ச்சியை முந்தைய காங்கிரஸ் அரசு செய்யவில்லை.  மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் பல்வேறு நலத்திட்டங்களை ஒடிசா மக்களுக்குச் செய்துள்ளோம்.8 லட்சம் மக்களுக்கு வீடுகள் கட்டித்தந்துள்ளோம். 
 
எனவே பாஜக ஆட்சிக்கு வந்தால் ஒடிசா மேலும் இரட்டை வளர்ச்சி அடையும். அண்மையில் வாவில் செயற்கைக் கோளை தாக்கி அழிக்கும் வகையில்  பாஜக ஆட்சியில் விண்வெளியில் காவலாளியை நியமித்துள்ளோம். ஆனால் இதை சர்சையாக்க முயல்கிறார்கள்.
 
வரும் தேர்தலில் நமது படைவீரரின் வீரத்தையும், விஞ்ஞானிகளின் கண்டுபடிப்புகளை கேலி பேசும் இவர்களுக்கு உங்கள் ஒட்டுகள் மூலம் தேர்தலில் பதிலடி தரவேண்டும் இவ்வாறு பேசினார்.