ஹன்சிகா ரெக்வெஸ்ட்...மறுப்பு சொல்லாத சிம்பு
ஹன்சிகா நடித்துவரும் மஹா படத்தில் கேமியோ ரோலில் சிம்பு நடிப்பது நமக்குத் தெரிந்ததே. படத்தில் சில நிமிடங்கள் மட்டுமே வரும்படி சிம்புவின் கேரக்டர் வடிவமைக்கப்பட்டிருந்தது.
ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா - ஸ்ரீகாந்த் ஜோடியாக நடித்துவரும் படம் மஹா. இந்தப் படத்தின் படப்பிடிப்பு துருக்கி உள்ளிட்ட நாடுகளில் நடந்துவருகிறது. இந்தப் படத்தில் முக்கியமான கேமியோ ரோலில் நடிகர் சிம்பு நடித்தால் நன்றாக இருக்கும் என படக்குழுவினர் ஃபீல் பண்ணியிருக்கிறார்கள். இதையடுத்து, சிம்புவுக்கு ஹன்சிகாவே போன் போட்டு படத்தில் நடிக்கும்படி கேட்டுக்கொள்ள, அந்த ரெக்வெஸ்டைத் தட்ட முடியாமல் ஓகே சொல்லியிருக்கிறார் சிம்பு.
வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தில் கொஞ்சம் உடல் எடை கூடியது போன்று காணப்பட்டதால், உடல் எடையைக் குறைப்பதற்காக லண்டனில் அதிநவீன ஜிம்மில் சிம்பு பயிற்சி பெற்றுவந்தார். பயிற்சிக்குப் பின் எடை குறைந்து புது லுக்கில் சிம்பு, துருக்கியில் நடைபெறும் மஹா ஷூட்டிங்கில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் சிம்புவின் கேரக்டர் சில நிமிடங்கள் மட்டுமே வருவதாக இருந்ததாம், ஆனால், சிம்புவின் கேரக்டர் 30 நிமிடங்கள் வரை வந்தால் நன்றாக இருக்கும் என படக்குழுவினர் நினைத்திருக்கிறார். இதையடுத்து திரைக்கதையில் இயக்குனர் சிறிய மாற்றம் கொண்டுவரவே, கால்ஷீட்டை அதிகப்படுத்துவது குறித்து சிம்புவிடம் பேசி ஓகே வாங்கியிருக்கிறார் ஹன்சிகா. வாலு படத்துக்குப் பின்னர் இந்த படத்தில் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள்.