திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 6 பிப்ரவரி 2018 (20:10 IST)

காதலர் தின சிறப்பு ஸ்மார்ட்போன்: விவோ அதிரடி!!

விவோ நிறுவனத்தின் ஸ்மார்ட்போனான வி7 பிளஸ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. தற்போது விவோ வி7 பிளஸ் ஸ்மார்ட்போன் இன்ஃபனைடே ரெட் நிறத்தில் காதலர் தினத்தை முன்னிட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
 
முன்னதாக ஷேம்பெயின் கோல்டு, மேட் பிளாக் நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்ட வி7 பிளஸ். பின்னர், எனர்ஜெடிக் புளூ நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. 
 
புதிய லிமிடெட் எடிஷன் அமேசான் வலைத்தளத்திலும், ஆஃப்லைன் முறையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை ரூ.22,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
 
விவோ வி7 பிளஸ் சிறப்பம்சங்கள்:
# 5.99 இன்ச் 1440x720 பிக்சல் 18:9 ஃபுல்வியூ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
# 4 ஜிபி ராம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
# 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், f/2.0 அப்ரேச்சர்
# 24 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஷ், f/2.0 அப்ரேச்சர்
# டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார், 3225 எம்ஏஎச் பேட்டரி திறன்.