திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By

காதலர் தின ஸ்பெஷலாக வெளிவருகிறது சாய்பல்லவியின் முதல் தமிழ்ப்படம்

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தை உலகமே கொண்டாடி வரும் நிலையில் 2018ஆம் ஆண்டு காதலர் தின ஸ்பெஷலாக சாய்பல்லவி நடித்துவரும் முதல் நேரடி தமிழ்ப்படமான 'கரு' வெளியாகவுள்ளது. காதலர் தினத்திற்கு ஐந்து தினங்களுக்கு முன்னர் அதாவது பிப்ரவரி 9ஆம் தேதி சாய்பல்லவி நடித்த 'கரு' திரைப்படம் வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேவி, வனமகன் என இரண்டு ஹிட் படங்களை கடந்த இரண்டு ஆண்டுகளில் கொடுத்த இயக்குனர் விஜய் இயக்கிய இந்த படம் 2018ஆம் ஆண்டின் வெற்றிப்படமாகவும், அவரது ஹாட்ரிக் வெற்றிப்படமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

சாய்பல்லவி முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இந்த படத்தில் நாகசெளரியா, ஆர்ஜே பாலாஜி, சந்தானபாரதி, ரேகா, நிழல்கள் ரவி உள்பட பலர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள   இந்த படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவும், அந்தோணி படத்தொகுப்பும் செய்துள்ளனர். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகவுள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.