வெடித்து சிதறிய ஸ்மார்ட்போன்: ஐபோன், சாம்சங், ரெட்மி வரிசையில் ஒப்போ
இப்போதெல்லாம் பிரபல ஸ்மார்ட்போன்கள் வெடிப்பது வாடிக்கையாடிவிட்டது. அதும் பழைய போன், புது போன் என பாராபட்சம் இல்லாமல் எல்லா ஸ்மார்ட்போன்களும் வெடிக்கிறது.
இதுவரை ஐபோன், சாம்சங், எர்ட்மி ஆகிய ஸ்மார்ட்போன்கள் வெடித்த செய்திகளை கேள்விப்பட்டிருப்போம், ஆனால் இப்போது இந்த் லிஸ்டில் ஒப்போ ஸ்மார்ட்போனும் இணைந்துள்ளது.
ஆம், ஐதராபாத்தை சேர்ந்த இம்ரான் கான் என்பவர் புதிதாக ஒப்போ ஸ்மார்ட்போன் ஒன்றை வாங்கியுள்ளார். குறிப்பிட்ட நாளன்று இவர் போனை சட்டைப்பையில் வைத்துக்கொண்டு சாலையில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக சட்டைப்பையில் இருந்த ஒப்போ ஸ்மாட்ர்போன் வெடித்து அருக்கு தலை மற்றும் கண்ணிலும் காயம் பட்டது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தொடரவுள்ளதாக தெரிகிறது. ஆனால், எந்த மாடல் ஸ்மார்ட்போன் வெடித்தது என தகவல் வெளியாகவில்லை.
முன்னர் ஒருமுறை ரெட்மி ஸ்மார்ட்போன் வெடித்த போது அந்நிறுவனம் நஷ்ட ஈடு வழங்கி, போனுக்கு கொடுக்கப்பட்டுள்ள சார்ஜரை மட்டுமே பயன்படுத்த அறிவுறுத்தியது. வேறு சார்ஜர்களை பயன்படுத்துவதால்தான் போன் சூடாகி வெடிக்கிறது என விளக்கமும் அளித்தது.
ஒருவேளை வெயில் அதிகமாக அடிப்பதால் ஸ்மார்ட்போன் வெடித்திருக்குமோ... சரி போகட்டும், ஒப்போ நிறுவனம் இந்த சம்பவத்திற்கு என்ன விளக்கம் அளிக்கவுள்ளது என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.