வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 13 ஏப்ரல் 2019 (12:40 IST)

நியூஸ் ஆப்புகளுக்கு ஆப்பு: ஜியோ எடுத்த அதிரடி முடிவு!!

ஸ்மார்ட்போன் வந்ததில் இருந்து பெரும்பாலான மக்கள் தங்களது வேலைகள் அனைத்தையும் இதிலேயே செய்து முடிக்கின்றனர். ஸ்மார்ட்போனில் நியூஸ் படிப்பது பலருக்கு வாடிக்கையாகிவிட்டது. 
 
இந்நிலையில், இதை டார்கெட்டாக்கி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ நியூஸ் செயலியை துவங்கியிருக்கிறது. இது செயலி மற்றும் இணையம் என இருவிதங்களில் கிடைக்கிறது. 
 
ஜியோ நியூஸ் செயலியில், உடனடி செய்திகள், லைவ் டிவி, வீடியோக்கள், நாளேடு, பத்திரிகை ஆகியவற்றை ஒரே தளத்தில் எளிதாக இயக்க முடியும். தேர்தல் மற்றும் ஐபிஎல் போட்டியை மனத்தில் வைத்து இப்போது ஜியோ தனது நியூஸ் சேவையை துவங்கியிருக்கிறது.
இந்தியா மற்றும் உலகம் முழுக்க கிடைக்கும் சுமார் 150க்கும் அதிகமான லைவ் செய்தி சேனல்கள், 800க்கும் அதிகமான பத்திரிகைகள், 250க்கும் அதிகமான நாளேடுகள், பிரபல வலைபக்கங்கள் மற்றும் செய்தி வலைதளங்களை 12க்கும் அதிக இந்திய மொழிகளில் தேர்வு செய்து பயன்படுத்த முடியும். 
 
அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, வியாபாரம், தொழில்நுட்பம், வாழ்க்கை முறை, அழகியல், வேலைவாய்ப்பு, ஆரோக்கியம், ஜோதிடம், வணிகம் என பல்வேறு செய்திகள் இங்கு கிடைக்கும். மேலும், டிரெண்டிங் வீடியோக்களையும் ஜியோ நியூஸ் செயலியில் பார்க்கலாம்.