புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 22 மார்ச் 2019 (19:27 IST)

அடேங்கப்பா... ஒரே மாதத்தில் ஒரு கோடியை அள்ளிய ஜியோ!!

மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஒரு கோடிக்கும் மேலான வாடிக்கையாளர்களை பெற்றுள்ளதாம்.
 
மேலும், டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில விஷயங்கள் பின்வருமாறு, 
 
# வயர்லெஸ் சந்தாததாரர்கள் எண்ணிக்கை 118.19 கோடி. அதாவது, டிசம்பர் 2018 வரை வயர்லெஸ் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 117.6 கோடியில் இருந்து ஜனவரி 2019-ல் 118.19 கோடியாக அதிகரித்துள்ளது. 
 
# பிஎஸ்என்எல் நிறுவனம் ஜனவரியில் 9.83 லட்சம் புதிய இணைப்புகளை பெற்றிருக்கிறது. அதபடி மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 11.53 கோடி.
 
# பாரதி ஏர்டெல் நிறுவனம் 1.03 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை சேர்த்திருக்கிறது. ஏர்டெல் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 34.04 கோடி.
 
# வோடபோன் ஐடியா நிறுவன சேவையை சுமார் 41.52 கோடி பேர் பயன்படுத்துகின்றனர் என்பனவாகும்.