புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 29 டிசம்பர் 2017 (14:23 IST)

தம்பியிடம் சரணடைந்த அண்ணன்: மீளா கடனின் விளைவா??

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானி மூன்றே மாதத்தில் ரூ.39,000 கோடி கடனை திருப்பி தருவதாக அறிவித்தார். ஆனால், தற்போது வெளியாகியுள்ள செய்தியின் மூலம் கடனை அவர் விரைவில் செலுத்திவிடுவார் என தெரிகிறது. 
 
ஆர்காம் நிறுவனத்தின் மொத்த கடன் ரூ.45,000 கோடி. இதில் ரூ.25,000 கோடி கடன் உள்நாட்டில் வாங்கப்பட்டது. மீதமுள்ள ரூ.20,000 வெளிநாட்டில் இருந்து கடனாகவும் கடன் பத்திரங்களாகவும் வாங்கப்பட்டது. 
 
இந்நிலையில் ஆர்காம் சொத்துகளை ஜியோ வாங்க இருக்கிறது என செய்திகள் வெளியாகியது. தற்போது இந்த செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் இரு நிறுவனங்களும் கையெழுத்திட்டிருக்கின்றன.
 
ஆர்காம் சொத்துகளை விற்க குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இந்த குழு ஆர்காம் சொத்துகளை ஏலம் விடுவதற்கான நடவடிக்கையை தொடங்கியது. தற்போது இந்த ஏலத்தில் வயர்லெஸ் ஸ்பெக்ட்ரம், டவர், பைபர் உள்ளிட்ட சொத்துகளை ஜியோ வாங்க இருக்கிறது. 
 
ஆர்காம் நிறுவனத்தின் 4ஜி சேவை மற்றும் 43,000 டவர்களை ஜியோ வாங்க இருக்கிறது. இந்த தொகை மூலம் ஆர்காம் தனது கடனை அடைக்கும். அதே சமயத்தில் ஆர்காம் நிறுவனத்தின் சொத்துகள் ஜியோ நிறுவனத்தின் விரிவாக்க பணிகளுக்கு பயன்படும். 

ஆர்காம் நிறுவனத்துக்கு புதிய முதலீட்டாளர் ஒருவரை கொண்டு வர இருக்கிறோம் என கூறிய அனில் அம்பானி, தற்போது இந்த ஒப்பந்ததில் கையெழுந்திட்டிட்ருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, அந்த புதிய முதலீட்டாளர் முகேஷ் அம்பானியா? என்ற சந்தேகம்தான் அது.