1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 1 டிசம்பர் 2017 (15:51 IST)

விஜய் 62' படத்தில் யோகிபாபு ஒப்பந்தம்

கோலிவுட் திரையுலகில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் யோகிபாபுவுக்கு 'விஜய் 62' படத்தில் வெயிட்டான கேரக்டர் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
 
ஏற்கனவே விஜய்யுடன் 'மெர்சல்' படத்தில் சூப்பராக நடித்து பாராட்டுக்களை பெற்ற நடிகர் யோகிபாபு தற்போது 'விஜய் 62' படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.
 
துப்பாக்கி படத்தில் சத்யன் நடித்த கேரக்டர் போல, கத்தி படத்தில் சதீஷ் நடித்த கேரக்டர் போல படம் முழுவதும் விஜய்யுடன் இணைந்து காமெடி செய்யும் கேரக்டரை தனக்காக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் உருவாக்கியிருப்பதாகவும், அவருக்கு தனது நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் யோகிபாபு தெரிவித்துள்ளார்.