ரூ.1,349-க்கு 4ஜி ஸ்மார்ட்போன்; ஏர்டெல்லின் அடுத்த ப்ளான்: கலங்கும் ஜியோ!!
தனியார் தொலைதொடர்பு நிறுவனமான ஏர்டெல் செல்கான் உடன் இணைந்து புதிய 4ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது.
இதற்கு முன்பு ஏர்டெல் மற்றும் கார்பன் மொபைல் நிறுவனம் இணைந்து கார்பன் A40 ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் வெளியிட திட்டமிட்டன.
தற்போது, தென் இந்தியாவில் ஏற்கனவே நல்ல வரவேற்பு உள்ள நிலையில், ஏர்டெல் இந்த திட்டத்தை தீட்டியுள்ளது. ரூ. 1,349-க்கு ஸ்மார்ட்போனி விற்க இரு நிறுவனங்களுக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாம்.
வாடிக்கையாளர்கள் முதலில் ரூ.2,849 கொடுத்து 4ஜி ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும். ஸ்மார்ட்போனை 18 மாதங்கள் பயன்படுத்தினால் 500 ரூபாயும், 36 மாதங்கள் வரை பயன்படுத்தினால் 1,000 ரூபாயும் ஏர்டெல் வாலெட்டில் கிடைக்கும்.
வாடிக்கையாளர்கள் தங்களுக்கு ஏற்ற ஏர்டெல் ரிசார்ஜ் திட்டத்தை தேர்வு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஜியோவின் 4ஜி பியூச்சர் போன்று இல்லாமல் இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து செயலிகளையும் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.
மேலும் மை ஏர்டெல், விங்க் மியூசிக், ஏர்டெல் டிவி போன்ற ஆப்ஸ் அனைத்தும் டீபால்ட்டாக இருக்கும்.