செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 12 ஏப்ரல் 2018 (15:38 IST)

விரைவில் 4ஜி சிம் ஸ்லாட் ஜியோ லேப்டாப்...

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், சிம் கார்ட், ஸ்மார்ட்போன், பீச்சர் போன் ஆகியவற்றில் கால் பதித்த நிலையில், அடுத்து 4ஜி சிம் ஸ்லாட் கொண்ட லேப்டாபை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
அதாவது, ஜியோ குவால்காம் நிறுவனத்துடன் இணைந்து லேப்டாப்களை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு உள்ளதாம். ஜியோ லேப்டாப் விண்டோஸ் 10 இயங்குதளம் மற்றும் பில்ட்-இன் செல்லுலார் கனெக்ஷன்ளை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 
 
இது குறித்து குவால்காம் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது, ஜியோவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். ஜியோ எங்களின் சாதனத்தை எடுத்து கொண்டு, அதில் டேட்டா மற்றும் தகவல்களை வழங்கலாம் என தெரிவித்துள்ளனர். 
 
சர்வதேச அளவில் குவால்காம் நிறுவனம் ஹெச்பி, அசுஸ் மற்றும் லெனோவோ ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து ஆல்வேஸ் கனெக்டெட் பிசி-க்களை உருவாக்க பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த லேப்டாப் உருவாக்கம் குறித்து குவால்காம் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ள நிலையில், ஜியோ சார்பில் எந்த ஒரு தகவலும் வெளியிடப்படவில்லை.