டேட்டாவை கொடுத்தாலும் பேட்டாவை எதிர்ப்பார்க்கும் ஏர்டெல்...

Last Updated: வியாழன், 12 ஏப்ரல் 2018 (10:48 IST)
ஜியோவின் வருகையால் இலவச டேட்டா, குறைந்த கட்டணத்தில் டேட்டா வழங்கப்படுகிறது. இதனால், மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை தக்கவைத்துகொள்ள போராடி வருகின்றனர். 
 
தொலைத்தொடர்பு சந்தையில் ஏற்பட்டுள்ள விலை போட்டி நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. சமீபத்தில் ஜியோ தினமும் 2 ஜிபி டேட்டா, இலவச வாய்ஸ் கால், 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை 28 நாட்களுக்கு வழங்குவதாக அறிவித்தது. 
 
இதற்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனம் தனது பயனர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது. ஆம், ரூ.249 விலையில் ஏர்டெல் பிரீபெயிட் பயனர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது.
இதில், அன்லிமிட்டெட் அழைப்புகள், இலவச ரோமிங், தினமும் 2 ஜிபி டேட்டா ஆகியவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகின்றன. என்னதான் ஜியோவுக்கு போட்டியாக சலுகை வழங்கினாலும், ஜியோ வழங்கும் விலையை விட அதிகமான விலையில்தான் ஏர்டெல் சலுகைகள் உள்ளது. அதாவது, ஜியோ சலுகையின் விலை ஏர்டெல்லை விட ரூ.51 குறைவு. 
 
இந்த ஒரு சலுகை மட்டுமின்றி மேலும் சில சலுகைகளையும் ஏர்டெல் வழங்கியுள்ளது. இது குறித்த தகவலை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :