திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 6 ஏப்ரல் 2018 (13:30 IST)

ஆர்காம் சொத்து சிக்கல்: புதிய திருப்பத்தால் ஜியோ மகிழ்ச்சி!

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் கடன் தொல்லையினால் தனது சொத்துக்களை விர்கும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகிறது. ஆனால், இதில் சில சிக்கல் ஏற்பட்டது. 
ஆர்-காம் நிறுவன சொத்துகளை ஜியோ நிறுவனத்துக்கு விற்பதற்கு மும்பை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. 300 கோடி டாலர் சொத்துகளை ஆர்காம் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவுக்கு விற்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
இதர்கு முன்னர் ஆர்காம் நிறுவனம் ரூ.1,000 கோடி எங்களுக்கு தரவேண்டி இருப்பதால் ஆர்-காம் நிறுவன சொத்துகளை விற்க அனுமதிக்கக்கூடாது என ஸ்வீடனைச் சேர்ந்த எரிக்ஸன் நிறுவனம் முறையிட்டது. இதனால் சொத்து விற்க தடை விதிக்கப்பட்டிருந்தது.  
இந்நிலையில், பாரத ஸ்டேட் வங்கியின் தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்பு மற்றும் ஆர்காம் நிறுவனம் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆர்-காம் நிறுவன சொத்துகளை விற்கலாம் என தெரிவித்துள்ளது.
 
இந்தத் தீர்ப்பை தொடர்ந்து ஆர்-காம் நிறுவனப் பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் 3.4 சதவீதம் அளவுக்கு ஏற்றம் கண்டு வர்த்தகமாயின. அதோடு விரைவில் சொத்துக்கள் விற்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.