புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 20 மே 2019 (10:41 IST)

எக்சிட்போல் எதிரொலி: பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்!!!

எக்சிட்போல் எதிரொலி காரணமாக பங்குச் சந்தைகளில் வர்த்தகம் உயர்வுடன் துவங்கியுள்ளது. 
 
கடந்த 2014 ஆம் ஆண்டு வீசிய மோடி அலை இந்த தேர்தலில் இல்லை. மேலும் மோடி மற்றும் பாஜக மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டதால் பெரும்பாலான ஊடகங்கள் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வராது என்றே செய்திகள் வெளியிட்டன. 
 
ஆனால் நேற்று வெளியான எக்சிட்போல் முடிவுகளில் கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களும் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்றே தெரிவித்துள்ளன. இதற்கு முக்கிய காரணம் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இணையாததே என்று கூறப்படுகிறது.
 
இதன் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் தொடங்கியுள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 962 புள்ளிகள் வரை அதிகரித்து, 38 ஆயிரத்து 892 புள்ளிகளாக வர்த்தகம் ஆனது. 
 
இதே போல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி, 242 புள்ளிகள் அதிகரித்து, 11 ஆயிரத்து 649 புள்ளிகளாக வர்த்தகம் ஆனது.