ரூ.1000 விலை மாதாந்திர பாஸ் கட்டணம் குறைப்பு.. சென்னை போக்குவரத்து ஆணையம் அறிவிப்பு..!
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் மாதாந்திர பயணச்சீட்டுகளின் விலையில் அதிரடியான குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை ஒருங்கினைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
சென்னை மாநகர பேருந்துகளில் நாள்தோறும் பயணம் செய்யும் சுமார் 70,000 மாதாந்திர பயண அட்டைதாரர்களுக்கு இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ. 1,000 மற்றும் ரூ. 2,000 மதிப்புள்ள மாதாந்திர பயணச் சீட்டுகளின் விலையே குறைக்கப்பட்டுள்ளது.
மாநகர பேருந்துகளில் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கவும், பயணிகள் பேருந்து நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிர்க்கவும், 'சென்னை ஒன்' என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த செயலி மூலம் மாதாந்திர பயண அட்டைகளை வாங்குவோருக்கு ரூ. 100 சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரூ. 100 சலுகையில், ரூ. 50 உடனடியாக விலை குறைப்பாகவும், மீதமுள்ள ரூ. 50 யூ.பி.ஐ மூலம் பரிவர்த்தனை செய்தால் கேஷ்பேக் முறையிலும் திருப்பி அளிக்கப்படும். இந்த சிறப்புச் சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Edited by Mahendran