திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 6 செப்டம்பர் 2017 (11:52 IST)

90 ஜிபி டேட்டா; ரூ.429-க்கு: ஜியோ, ஏர்டெல்லுக்கு ஆப்படிக்கும் பிஎஸ்என்எல்!!

பிஎஸ்என்எல் ரூ.429-க்கு தனது புதிய திட்டத்தை ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.


 
 
ஜியோ தனது இலவச சேவைகள் முடிந்ததும் வாடிக்கையாளர்களுக்கு கட்டண சேவையை துவங்கியது. ஆனால் அதில் பல சலுகைகளை வழங்கியது. 
 
ஜியோவிற்கு போட்டியாக ஏர்டெல்லும் சரிசமமான சலுகை சேவைகளை அறிமுகம் செய்தது. தற்போது ஜியோ மற்றும் ஏர்டெல்லுக்கு போட்டியாக பிஎஸ்என்எல் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
 
பிஎஸ்என்எல் ரூ.429 திட்டமானது 3 மாதங்களுக்கு செல்லுபடியாகும். நாள் ஒன்றுக்கு 1 ஜிபி அளவிலான டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்கப்படும். மொத்தம் 90 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
 
தற்போதைய தொலைத்தொடர்பு சந்தை சூழ்நிலையில் இது மிகவும் போட்டி மிகுந்த திட்டமாக திகழும் என பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது.