ரூ.10 கோடியை நெருங்கியது 'விவேகம்' சென்னை வசூல்


sivalingam| Last Modified திங்கள், 4 செப்டம்பர் 2017 (07:37 IST)
பல்வேறு பிரச்சனைகள், நெகட்டிவ் விமர்சனங்களையும் தாண்டி அஜித்தின் விவேகம் திரைப்படம் இரண்டாவது வாரமாக திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது.


 
 
இந்த படம் சென்னையில் கடந்த இரண்டு வாரங்களில் ரூ.8.57 கோடி வசூல் செய்துள்ளது. இன்னும் ஓரிரண்டு நாட்களில் ரூ.10 கோடியை நெருங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
சென்னையில் ரூ.10 கோடி வசூலை தொட்ட ஒரே படம் 'பாகுபலி 2' என்ற நிலையில் இந்த படத்துடன் 'விவேகம்' படமும் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று ஒரே நாளில் சென்னையில் இந்த படம் ரூ.43 லட்சம் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :