1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

கவியரசர் மகளுக்கு இளையராஜா வாய்ப்பு!

விசாலி கண்ணதாசன் இளையராஜா சங்கீதா
கண்ணதாசன் கடைசியாக எழுதிய திரைப்படப் பாடல், மூன்றாம் பிறையில் இடம்பெற்ற கண்ணே கலை மானே...

கவியரசரின் திரையிசைக்கு முற்றுப்புள்ளியாக அமைந்த அந்தப் பாடலுக்கு இசையமைத்த இளையராஜா, கவியரசரின் மகளின் திரைப் பயணத்துக்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார்.

திருமணத்திற்குப் பிறகு கவியரசரின் மகள் விசாலி கண்ணதாசன் மீடியா வெளிச்சத்திலிருந்து விலகி இருந்தார். நிலவு தேயலாம், திறமை தேயலாமா? அதுதான் விசாலியை தேடி வாய்ப்பு கொடுத்திருக்கிறார் இளையராஜா.

சங்கீதா நடிப்பில் தயாராகும் தனம் படத்தில் பாடல் எழுத விசாலி கண்ணதாசனுக்கு அழைப்பு விடுத்தார் இளையராஜா. விசாலியும் அதனை ஏற்றுக்கொண்டார். உற்சாகமான இசைஞானி உடனடியாக கண்களும் கவிபாடுதே படத்தில் ஒரு பாடல் எழுத வாய்ப்பு கொடுத்து விசாலியை பிஸியாக்கியிருக்கிறார்.

தொடர்ந்து பாடல் எழுத முடிவு எடுத்திருப்பதாக கவியரசரின் மகள் தெரிவித்துள்ளார்.