Daily Horoscope
✕

அதிமுகவை பாஜக விழுங்கிவிடும் - விசிக தலைவர் திருமாவளவன்

Written By Sinoj
Updated: செவ்வாய், 23 மார்ச் 2021 (19:00 IST)
தேர்தலுக்குப் பின் அதிமுகவை பாஜக விழுங்கிவிடும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல்  6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, ம.நீ,.ம போன்ற கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட நிலையில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக நேற்று தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.

இந்நிலையில் ஒவ்வொரு கட்சியும் எதிர்க்கட்சியினரை தாக்கியும் விமர்சித்தும் பேசி வருகின்றனர். மக்களிடம் வாக்குகள் சேகரிக்கும்போது, இந்த விமர்சனங்கள் இன்னும் அதிகமாகிறது.

இந்நிலையில் திமுக கூட்டணியில் 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது விசிக. இக்கட்சியில் தலைவர் திருமாவளவன் இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
சட்டமன்ற தேர்தலுக்குப் பின் அதிமுகவை பாஜக விழுங்கிவிடும்.  அதிமுகவுக்கு மக்கள் வாக்களித்தால் அது பாஜகவுக்கே போய்ச்சேரும்.அதிமுகவை இன்னும் கொஞ்சம் காலத்தில் பாஜக அழித்துவிடும்.குட இருந்தால் பாஜக குழிபறிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

எல்லாம் காட்டு

சிஜேபி தலைவர் அபிஜித் பாட்டி மறைவு.. மனித நேயத்துடன் நடந்து கொண்ட டெல்லி போலீஸ்..

டாஸ்மாக் ஊழியர்களுக்க்கு ரூ.50 லட்சம் வரை காப்பீடு திட்டம்.. தமிழக அரசு தரும் தீபாவளி பரிசு...

நேபாளத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு.. 7 வீடுகளை காணவில்லை.. உயிரிழப்பு நடந்ததா?

நவம்பர் 14 குழந்தைகள் தினத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கேக்.. ரூ.9.27 கோடி ஒதுக்கீடு..

வங்கக்கடலில் புயல் சின்னம்.. சென்னைக்கு கனமழை வாய்ப்ப? பருவமழை தொடங்குகிறதா?

அடுத்த கட்டுரையில்
Show comments