அதிமுகவுக்கு ஆதரவு : ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நீக்கம்
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் வரவுள்ளது. இதற்கான அமைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் முழுக்க ஒரே கட்டமாக நடைபெறவுள்ள இத்தேர்தலில் ஓட்டு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ரஜினி சட்டசபைத் தேர்தலில் போட்டியிடவில்லை எனக் கூர நிலையில் அக்கட்சியினர் தங்களுக்கு விருப்பமான கட்சிக்கு வாக்களைக்காலாம் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில்,வரும் சட்டமன்றத் தேர்தலில் ரஜினியின் மக்கள் மன்ற நிர்வாகிகள் அதிமுகவுக்கு ஆதரவு அளித்ததால் நீக்கப்பட்டுள்ளனர்.
ரஜினி மக்கள் மன்றத்தில் கட்டுப்பாடுகளை மீறி அதிமுகவுக்கு ஆதரவு அளித்து தேர்தல் பிரச்சாரம் செய்த திருச்சொங்கோடு ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தற்போது நீக்கப்பட்டுள்ளனர்.