இந்தியா-பாகிஸ்தான் மோதல்:வெற்றி யாருக்கு??
இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டரில் இன்று நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் மிகப்பெரிய எதிர்பார்ப்பையும்,ஆர்வத்தையும் ஏற்படுத்தியிருக்கும் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ஆட்டம், இன்று மதியம் இந்திய நேரப்படி 3.00 மணிக்கு நடக்கவிருக்கிறது.
கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதல் என்றாலே உலகம் முழுவதும் அனல் பறக்கும்.
அதுவும் இன்று உலக கோப்பை கிரிக்கெட் போட்டி என்பதால் இந்தியா-பாகிஸ்தானைச் சேர்ந்த ரசிகர்கள் மட்டுமன்றி, உலக கிரிக்கெட் ரசிகர்கள் முதற்கொண்டு பேரார்வத்துடன் உள்ளனர்.
மேலும் இரு நாட்டு உறவுகளில் ஏற்பட்ட விரிசல் காரணமாக இந்த போட்டியை பெரும் யுத்தம் போலவே இரு நாட்டு ரசிகர்களும் எதிர்பார்க்கின்றனர்.
இன்று நடக்கும் போட்டியில் எந்த அணி வெற்றிபெற போகிறது என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.