வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 15 ஜூன் 2019 (14:01 IST)

விஷவாயுவால் தொடரும் உயிரிழப்புகள்:என்று முடியும் இந்த அவலம்??

குஜராத் மாநிலத்தில், தனியார் ஓட்டலின் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தியாவில் விஷவாயுவினால் ஏற்படும் பலிகள், கடந்த 5 வருடங்களில் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. மாதத்திற்கு 5 பேர் வீதம் விஷவாயு தாக்கி உயிரிழக்கின்றனர் என்று பல தகவல்கள் கூறுகிறது.

இந்நிலையில் இன்று குஜராத் மாநிலத்தில் வதோத்ரா மாவட்டத்தில் பர்திகுயி பகதியைச் சேர்ந்த தனியார் ஓட்டல் ஒன்றில், துப்புரவு பணியிலிருந்த 7 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்ததாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

விஷவாயு தாக்கிய தகவலை அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவின் பல மாவட்டங்களில் துப்புரவு பணியாளர்கள், தங்களுக்கு போதிய பாதுகாப்பு அணிகலன்கள் தரவேண்டும் என போராட்டங்கள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.