1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. உலக கோப்பை கிரிக்கெட் 2019
Written By
Last Updated : சனி, 17 அக்டோபர் 2020 (16:53 IST)

மோர்கனால் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியாது – கம்பீர் சாடல்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் பதவியை தினேஷ் கார்த்திக்கிடம் இருந்து பிடுங்கி இயான் மோர்கனிடம் அளித்துள்ளது நிர்வாகம்.

2020ம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றன. முதல் சுற்றில் 7 போட்டிகளில் மற்ற அணிகளோடு மோதிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 போட்டிகளில் வெற்றியும், மூன்று போட்டிகளில் தோல்வியும் தழுவி ஐபிஎல் தரவரிசையில் நான்காவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் கடந்த முதல் சுற்றில் 7 போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்து வந்த தினேஷ் கார்த்திக் கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் நைட் ரைடர்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான இயான் மோர்கன் புதிய கேப்டனாக பதவி ஏற்றுள்ளார். இரண்டாம் சுற்று ஆட்டங்களுக்கு இவரே கேப்டனாக நீடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கொல்கத்தா அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய பாஜக எம்பியுமான கவுதம் கம்பீர் இந்த முடிவு குறித்து தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். அதில் ‘தொடரின் ஆரம்பத்திலேயே மோர்கனிடம் கேப்டன்சியை அளித்திருந்தால் ஏதாவது செய்திருக்க முடியும். இப்போது அவரால் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. அதுமட்டுமில்லாமல் கேப்டனை மாற்றும் அளவுக்கு அந்த அணி ஒன்றும் மோசமாக இல்லை. உலகக்கோப்பை வென்ற கேப்டன் இருக்கிறார் என்பதற்காக மோர்கனிடம் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கலாம்’ எனக் கூறியுள்ளார்.