தொடர்புடைய செய்திகள்
- பிக்பாஸுக்கு போட்டியாக ஜி தமிழ் புதிய நிகழ்ச்சி! களைகட்டும் சின்னத்திரை!
- சிம்புவின் சம்பளம் இவ்வளவா? அதிர்ச்சியில் திரையுலகம்!
- வெங்கட் பிரபு பாணியில் சிறுத்தை சிவா – அண்ணாத்தயில் செய்த வேலை!
- இரண்டாம் குத்து படத்தில் சிம்பு பற்றி ட்ரோல் சீன்கள்- கடுப்பான ரசிகர்கள்!
- காங்கிரஸ் மூத்த தலைவருக்கு கொரோனா தொற்று உறுதி!
கெய்ல் ஷார்ஜாவில் இருந்து அபுதாபிக்கு பந்தை அனுப்புவார் – புகழ்ந்த முன்னாள் வீரர்!
டி20 கிரிக்கெட் போட்டியின் முடிசூடா மன்னண் என வர்ணிக்கப்படும் கிறிஸ் கெய்ல் பற்றி இந்திய வீரர் யுவ்ராஜ் சிங் புகழ்ந்து பேசியுள்ளார்.
யுனிவர்சல் பாஸ் என அழைக்கப்படும் கிறிஸ் கெய்ல் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். ஆனால் உடல்நிலைக் கோளாறு காரணமாக அவர் முதல் 7 போட்டிகளில் விளையாடவில்லை. இதனை அடுத்து அவர் பெங்களூர் அணிக்கெதிரான போட்டியில் களமிறங்கி அரைசதம் அடித்தார். அந்த போட்டியில் நான்கு சிக்ஸர்களை விளாசி தனது ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றினார். போட்டியில் பஞ்சாப் அணியும் வெற்றி பெற்றது.
இந்நிலையில் அவரின் ஆட்டத்திறன் பற்றி இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங் ‘கெய்லுக்கு பந்து சரியாக மாட்ட ஆரம்பித்தால் ஷார்ஜாவிலிருந்து அபுதாபியில் போய் பந்துகள் விழும். விரட்டலில் ராகுலும் மயங்க் அகர்வாலும் பெரிய தொடக்கத்தைக் கொடுத்தனர். அவர்களே பினிஷ் செய்திருக்க வேண்டும். ஏபி டிவில்லியர்ஸ் தாமதமாகக் களமிறங்கியது எனக்கு ஆச்சர்யத்தை அளித்தது.’ எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்