செவ்வாய், 21 மார்ச் 2023
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. உலக கோப்பை கிரிக்கெட் 2019
Written By
Last Modified ஞாயிறு, 16 ஜூன் 2019 (11:42 IST)

மண்ணைக் கவ்விய இலங்கை:ஆஸ்திரேலியா அபார வெற்றி

நேற்று நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது ஆஸ்திரேலிய அணி.

முதலாவதாக பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 50 ஓவர்களில் 334 ரன்களை குவித்து 7 விக்கெட்டுகளை இழந்தது.

இதில் ஆஸ்திரேலிய அணி வீரரான ஃபின்ச், அபாரமாக ஆடி, 132 பந்துகளில் 153 ரன்களும், ஸ்மித் 59 பந்துகளில் 73 ரன்களும் குவித்தனர்.

இதன் பிறகு இரண்டாவதாக பேட்டிங் செய்த இலங்கை அணி, 45.5 ஓவர்களில் 247 ரன்கள் குவித்து தோல்வியை தழுவியது.

இலங்கை அணியில், கருணாரட்னே 108 பந்துகளுக்கு 97 ரன்களும், பெரேரா 36 பந்துகளுக்கு 52 ரன்களும் குவித்தனர்.

ஏற்கனவே இலங்கை அணி, கடந்த 4 போட்டிகளில் 1 போட்டி மட்டுமே வென்ற நிலையில், தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் ஏற்பட்ட தோல்வி, இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது.

மேலும் இனி வரும் போட்டிகளில், இலங்கை அணி இதே நிலையில் தொடர்ந்தால் புள்ளி விவரப் பட்டியலில் சறுக்கலை காணும் எனவும் கிரிக்கெட் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.