தோற்ற விரக்தி.. ஊடகங்களை சந்திக்காத இலங்கை – தடைவிதிக்க ஐசிசி முனைப்பு !
நேற்று நடைபெற்ற போட்டியில் தோல்வியடைந்த பின் ஊடகங்களை சந்திக்காமல் சென்ற இலங்கை அணிக்குத் தடை விதிக்க ஐசிசி யோசித்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
சர்வதேசப் போட்டிகள் முடிந்த வெற்றி பெற்ற அணியினரும் தோல்வி பெற்ற அணியினரும் ஊடகங்களை சந்தித்து பேட்டிக் கொடுக்க வேண்டும் என்பது ஐசிசி-ன் விதிமுறைகளில் ஒன்று. ஆனால் நேற்று ஆஸ்திரேலியாவுடன் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டித் தொடரில் தோற்ற இலங்கை அணி வீரர்கள் ஊடகங்களை தவிர்த்தனர்.
இது ஐசிசி விதிகளுக்கு எதிரானது என்பதால் கோபமடைந்துள்ள ஐசிசி இலங்கை மீது நடவடிக்கை எடுக்கும் யோசனையில் உள்ளது. இது குறித்து விளக்கமளித்துள்ள ஐசிசி செய்தித் தொடர்பாளர் ‘இலங்கை அணி ஐசிசி விதிமுறைகளை மீறியுள்ளது. இந்த தவறுக்காக இலங்கை அணிக்குக் கட்டாயமாக தண்டனை வழங்கப்படும். அதிகபட்சமாக இலங்கை அணிக்குத் தடை விதிக்கவும் வாய்ப்பிருக்கிறது’ எனக் கூறியுள்ளார்.