திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 10 ஏப்ரல் 2023 (09:27 IST)

இதுவரை உலகக்கோப்பையில் இல்லாத சோகம்… புது கேப்டன்களோடு களமிறங்கும் அணிகள்!

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரை நடத்திய இங்கிலாந்து அணியே வென்று சாம்பியன் ஆனது.  இதையடுத்து 2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை தொடர், முழுக்க முழுக்க இந்தியாவில் நவம்பர் மாதத்தில் நடக்க உள்ளது.

இந்த தொடரில் 10 அணிகள் கலந்துகொள்கின்றன. இந்த 10 அணிகளை வழிநடத்தும் கேப்டன்கள் யாருமே கடந்த உலகக்கோப்பையில் அணியை வழிநடத்தியவர்கள் இல்லை என்பதுதான் சோகம். கோப்பையை வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மோர்கன் அணியில் கூட இல்லை என்பதுதான் சோகம். இதுவரை நடந்த 13 உலகக் கோப்பையில் ஒருமுறை கூட இப்படி நிகழ்ந்ததில்லை.